‘இன்று மாலை 6 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது’ என்று பதிவிட்டிருந்த ‘பிகில்’படத்தின் நிர்வாகத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சில மணித்துளிகளுக்கு சரியாக 6 மணிக்கு பிகில் படத்தின் மூன்றாவது லுக் ஒன்றை வெளியிட்டார்.

விஜயின் 46 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் ரசிகர்களால் வெகு விமரிசையாகக்கொண்டாடப்படுகிறது, ரத்த தானங்கள், அன்னதானம், இலவச பஸ் பயணம், ஒரு வருடத்துக்கு காலை இலவச டிபன் என்று அங்கங்கே   ரசிகர்கள் தெறிக்கவீட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை 6 மணிக்கு  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தந்தை, மகன் என்று இரண்டு கேரக்டர்கள் படத்தில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. படத்துக்கு ‘பிகில்’ என்று பெயரிடப்பட்டது அதிகாரபூர்வமாக அற்விக்கப்பட்டது.

இதையடுத்து பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. காவி வேட்டியுடன், கையில் ஆயுதமும் கழுத்தில் சிலுவையும் இருக்கும் வகையில் தந்தையின் கேரக்டர் இருக்க, பின்னணியில் மூன்று விஜய், வித்தியாசமான லுக்-களில் இருப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டது.படத்தின் இரண்டு போஸ்டர்களுமே ரசிகர்களுக்கு விருந்து தரும் வகையில் அமைந்துதிருந்த நிலையில் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா கையில் செயினுடன் விஜய் தர லோக்கலாக லுங்கி கட்டியிருக்கும் மூன்றாவது லுக்கை வெளியிட்டிருக்கிறார்.