நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. ஆரம்பத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட படம், பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க உள்ளது. அப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி 3வது வாரத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த படத்திற்காக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்த சிம்பு, நல்ல பிள்ளையாக மலைக்கு போய் திரும்பி வந்துவிட்டார். விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதற்காக கடினமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மாடல் போல செம்ம ஸ்டைலிஷ் ஆக இருந்த சிம்புவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் "மாநாடு" படத்தில் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.