vijay father about cast issue

தற்போது வெளியாகியுள்ள மெர்சல் படத்தின் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக உருவாகும் அளவிற்கு மாறியுள்ளது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தாலும், அரசியல் தலைவர்களிடம் எதிர்ப்புகள் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் பாஜக.,வைச் சேர்ந்த எச்.ராஜா நடிகர் விஜய்யை 'ஜோசப் விஜய்' என குறிப்பிட்டு அவரை கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என பிரித்து பேசியிருந்தார். 

தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எச்.ராஜாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், விஜய் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே அவரை நான் இந்தியன் என்று தான் கூறி பதிவு செய்தேன். ஒரு இந்தியனுக்கு எந்த ஜாதி மதம் தேவையில்லை அதிலும் அவர் பெற்ற அடையாளத்தை மறைக்க மதத்தை உபயோகிப்பது சிறுபிள்ளைத் தனமாக உள்ளது என கூறியுள்ளார்.