தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான அஜித்குமார், முன்னணி நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம் படத்தில் இருவரிடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஷாலினியை கரம் பிடித்தார் அஜித். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். 

தல ரசிகர்கள் அஜித்தை எந்த அளவிற்கு கொண்டாடுகிறார்களோ, அதே அளவிற்கு அவரது மகன், மகளையும் தலைமேல் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று அஜித் மகள் அனோஷ்கா தனது 13வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து #HBDAnoushkaAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

 

அதே நேரத்தில் குழந்தையாக இருக்கும் அனோஷ்காவை தளபதி விஜய் தூக்கி வைத்திருப்பது போன்றும், அப்பா அஜித் மடியில் அமர்ந்திருக்கும் அனோஷ்காவிற்கு விஜய் விளையாட்டு காட்டுவது போன்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அஜித் மகளுடன் விஜய் உள்ள அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ள தளபதி ரசிகர்கள், தலயின் தலைமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். என்னதான் டுவிட்டரில் அஜித் ரசிகர்களுடன், விஜய் ரசிகர்கள் மல்லுக்கட்டினாலும் அவர்களது பிள்ளைகளின் பிறந்தநாளின் போது பரஸ்பரம் இருதரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.