நேற்று முன் தினம் (மே 1 ஆம் தேதி) அஜித் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடினர். தல-யின் தீவிர ரசிகர்கள் பலர், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு தங்களால் இயன்ற உதவியை நேரில் சென்று வழங்கினர்.

மேலும் அவர்களுடன் கேக் வெட்டியும் அவர்களுக்கு உணவு வழங்கியும் மகிழ்ந்தனர். சிலர் அஜித் பெயரில் கோவில்களில் அர்ச்சனை செய்து, வெடி வெடித்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜாமாய்த்து விட்டனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு போட்டியாக, விஜய்யின் பேனர் ஒன்றை நடு ரோட்டில் வைத்து, பாலபிஷேகம் செய்து கடவுளே... கடவுளே... என வணங்கி பேனர் முன் விழுந்து வழங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ இதோ...