விஜய்யையும், அவரது படங்களையும் கெத்தாக தலைநிமிர வைக்கும் அவரது ரசிகர்கள், தற்போது செய்துள்ள காரியம் "மாஸ்டர்" படத்திற்கு மிகப்பெரும் சிக்கலாக உள்ளது. 

தளபதி விஜய்க்கு தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்களின் பலம் குறித்து சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. கேரளா, கர்நாடகா என விஜய் கால் வைக்கும் இடங்கள் எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் வரவேற்க காத்து நிற்கிறது. கர்நாடாகவில் உள்ள சிவமோகாவிற்கு ஷூட்டிங் சென்ற விஜய்க்கு, அங்கிருந்த ரசிகர்கள் அளித்த வரவேற்பு திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "மாஸ்டர்" படத்தில் நடித்து வருகிறார் விஜய். மூன்று தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு கெத்து காட்டியது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸையே, ஏதோ பட ரிலீஸ் போல விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டனர். 

அதேபோன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரீலிஸ் ஆன அன்று #Masater என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் உலக அளவில் ட்ரெண்டானது. இப்படி விஜய்யையும், அவரது படங்களையும் கெத்தாக தலைநிமிர வைக்கும் அவரது ரசிகர்கள், தற்போது செய்துள்ள காரியம் "மாஸ்டர்" படத்திற்கு மிகப்பெரும் சிக்கலாக உள்ளது. 

Scroll to load tweet…

"மாஸ்டர்" படத்தின் பர்ஸ்ட் லுக்கை கொண்டாடும் விதமாக தென் சென்னை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் "சி.எம். ஆப் தமிழ்நாடு" என விஜய்யை குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Collection Master என்பதை குறிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தாலும், கொட்ட எழுத்தில் CM OF TAMILNADU என எழுதப்பட்டுள்ளது பலரது கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது.