நடிகர் விஜய் தன்னுடைய 47 ஆவது பிறந்த நாளை, ஜூன் 22ஆம் தேதி கொண்டாட உள்ளார்.  தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேற்றிலிருந்து துவங்கிவிட்டனர் விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள்.

தளபதி பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'விலையில்லா விருந்தகம்' என்கிற பெயரில் விஜய் ரசிகர்கள் தினம் தோறும் உணவு வழங்க உள்ளனர். காலை 7 மணி முதல் இரவு 8 :30 மணி வரை இந்த விதையில்லா உணவுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் 109 பேருக்கு தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த திட்டம் வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனை எதிரே உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் துவங்கப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. விஜய் ரசிகர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. பலரும் இந்த விலையில்லா உணவகத்தில் வயிறார உண்டு விஜய் மக்கள் மன்ற ரசிகர்களை வாழ்த்தி வருகின்றனர்.