பசி, பட்டினியால் வாடும் கூலி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக தலா 25 கிலோ எடை கொண்ட 150 மூட்டை அரிசியை இலவசமாக கொடுத்துள்ளனர்

கொரோனா விழிப்புணர்வு குறித்தோ, நிதி நெருக்கடி காலத்தில் அரசுக்கு உதவ முன்வருவது குறித்தோ தளபதி விஜய் வாய் திறக்கவே இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் விஜய் தனது ரசிகர்கள் மன்றம் மூலம் சத்தமே இல்லாமல் உதவிகளை செய்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டுவிட்டரில் அஜித் ரசிகர்களுடன் கேவலமாக கட்டி உருண்டாலும், சமூக அக்கறை என்ற விஷயம் வரும் போது தளபதி ரசிகர்கள் தங்களது மாஸை காட்டிவிடுகின்றனர். டுவிட்டரில் தேவையில்லாத ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்வதை விட்டு, விட்டு, உருப்படியான விஷயங்களை உலகறிய செய்யுங்கள் என தனது ரசிகர்களுக்கு விஜய் கட்டளை பிறப்பித்தார். 

அன்றிலிருந்து தலைக்கவசம், தெலங்கானா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை போன்ற விஷயங்களை டுவிட்டர் மூலம் உலகத்திற்கே தெரியவைத்தனர். அதுமட்டுமின்றி தக்க சமயத்தில் களத்தில் இறங்கியும் சேவையாற்றி வருகின்றனர். 

இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!

கொரோனாவை எதிர்க்க நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டு இருந்தாலும், பலரும் அதை பின்பற்றாமல் வெளியே சுற்றித் திரிந்து கொரோனா வைரஸை பரப்பி வருகின்றனர். வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று மாட்டிக் கொண்ட பலர், நடை பயணமாக சொந்த ஊருக்கு பயணப்படும் சோகங்களையும் காண முடிகிறது.

இதையும் படிங்க: வீண் விளம்பரம் தேடி புண்ணான மீரா மிதுன்... இவ்வளவு ஹாட்டா டிரஸ் போட்டும் எல்லாம் வேஸ்டா போச்சே...!

பசி, பட்டினியால் வாடும் கூலி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக தலா 25 கிலோ எடை கொண்ட 150 மூட்டை அரிசியை இலவசமாக கொடுத்துள்ளனர். வட சென்னை மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு, இலவச முகக்கவசங்கள் வழங்குதல் போன்ற செயல்களிலும் தீயாய் ஈடுபட்டு வருகின்றனர்.