தகுந்த போலிஸ் பாதுகாப்புடன் தமிழகம் முழுவதுமுள்ள தியேட்டர்களில் உள்ள பேனர், கட் அவுட்களை அ.தி.மு.க.வினர் கிழித்து எரித்து வரும் நிலையில், அவர்களை எதுவும் செய்யாத காவல்துறை வரிசையாக விஜய் ரசிகர் மன்றத்தினர் மீது மட்டும் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து வருகிறது. இனி கனவில் கூட விஜய்க்கு அரசியல் ஆசை வரக்கூடாது என்னும் நோக்கில் அரசு தரப்படும் நேரடி நெருக்கடியாகவே இது கருதப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக இதுவரை தஞ்சை - 25 பேர், திருவாரூர் - 24 பேர், நாகை - 20 பேர், கரூர் - 10, திருச்சி - 4 பேர், புதுக்கோட்டை - 4 பேர் என மொத்தம் 87 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் விஜய் ரசிகர் மன்றத்தினர் பலரும் தலைமறைவாக உள்ளனர்.

பேனர், கட் அவுட்கள் வைக்க ஒரு தியேட்டருக்கே சில லட்சங்கள் ஆகும் எனும்போது தமிழகம் முழுக்க நாசம் செய்யப்பட்ட எரிக்கப்பட்ட பேனர்களின் மதிப்பு சில கோடிகளாக இருக்கக்கூடும் என்கிறது சர்கார் விநியோகஸ்தர் தரப்பு.