'லியோ' படம் பார்க்க வந்த ரசிகருக்கு... தியேட்டரில் கால் உடைந்ததால் பரபரப்பு!
'லியோ' படத்தின் முதல் நாள், முதல் காட்சியை பார்க்க ஆவலோடு இருந்த ரசிகர் டிக்கெட் வாங்க சுவற்றில் இருந்து எகிறி குதித்த போது, கால் உடைந்ததால் பரபரப்பு.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தை ஏற்கனவே தளபதி விஜய் வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கிய, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு இப்படம் ரிலீஸ் ஆனது.
ஒரு சில ரசிகர்கள் காலை 9 மணிக்கு முன்பாகவே படத்தை பார்க்க, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, போன்ற மாநிலங்களுக்கு படையெடுத்து சென்ற நிலையில்... பல ரசிகர்கள் 9 மணி வரை காத்திருந்து 'லியோ' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தமிழகத்திலேயே கண்டு ரசித்தனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் வசதி கொண்ட திரையரங்குகளில், நேற்றைய தினமே டிக்கெட்டுகள் அணைத்தும் புக் செய்யப்பட்டது.
ஆன்லைன் வசதி இல்லாத திரையரங்குகளில், நேரடியாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் 'லியோ' படத்தின் டிக்கெட் வாங்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அப்போது விஜயின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், டிக்கெட் தீர்ந்து விடுவதற்குள் எப்படியும் டிக்கெட்டை வாங்கி விட வேண்டும் என்கிற, ஆர்வத்தில்... மிகவும் உயரமான திரையரங்க சுவரில் இருந்து எகிறி குதித்தார்.
Leo : லியோ திரைப்படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன சீக்ரெட்
இதில் அவரின் காலில் பலத்த அடிபட்டு, கால் உடைந்தது. எனினும் அதை பொருட்படுத்தாமல் வெறித்தனமாக திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்குள் ரத்தத்தோடு அவர் சென்ற நிலையில், அவரை தடுத்த போலீசார்... அவருக்கு அறிவுரை கூறி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கால் உடைந்ததால் 'லியோ' படத்தை பார்க்க முடியாத அதிருப்தியில், அன்பரசு கண்ணீர் விட்டு அழுதது பலரது நெஞ்சங்களை உருக வைத்தது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D