நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில், பரசுராம் பெட்லா இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், பிரபல தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஃபேமிலி ஸ்டார்'. குஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்துள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர். 

பாத் டவல் போல் இருக்கும் கிக்கான உடையில்... ஓப்பேன் வேறையா? கிளாமர் காட்டி இளசுகளை வெறியேற்றும் ராஷ்மிகா!

இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கான மியூசிக் புரோமோஷனாக படத்தில் இருந்து சார்ட்பஸ்டர் முதல் பாடல் 'நந்தனந்தனா' சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்சேஷனல் ஹிட் ஆகியுள்ளது. 

Regina Cassandra : விரைவில் நடிகை ரெஜினாவுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? தீயாக பரவும் தகவல்!

அப்படி இருக்கும்போது படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், படத்தின் டீசர் அறிவிப்பு மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படமுழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.