Asianet News TamilAsianet News Tamil

ராஷ்மிகா பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி... வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்த விஜய்!

அர்ஜுன் ரெட்டி புகழ், நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவுடன்  இணைந்து 'கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 

vijay devarakonda wish the rashmika birthday through video
Author
Chennai, First Published Apr 5, 2019, 2:03 PM IST

அர்ஜுன் ரெட்டி புகழ், நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவுடன்  இணைந்து 'கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர்கள் இருவருக்குமே இது வெற்றிப் படமாக அமைந்தது.  இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'டியர் காம்ரேட்' படத்திலும் விஜய் - ராஷ்மிக்கா ஜோடி மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

vijay devarakonda wish the rashmika birthday through video

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சிறு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் தற்போது தமிழிலும் ராஷ்மிகா அறிமுகமாகியுள்ளார்.  நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.

vijay devarakonda wish the rashmika birthday through video

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராஷ்மிகாவிற்கு  வாழ்த்து கூறி,  கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios