விஜய் தேவரக் கொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான, 'அர்ஜுன் ரெட்டி ' திரைப்படத்திற்கு பின் , தெலுங்கு திரையுலகில் மட்டும் இன்றி, மற்ற மொழிகளிலும் இவருக்கு அதிக ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

இந்த படத்தை, இந்தி, தமிழ் என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர். அந்த வகையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் , ஓரிரு மாதத்திற்கு முன் வெளியாகி நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் 'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கீதாகோவிந்தம்:

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பின், விஜய் தேவரக்கொண்டா, நடிகை ரஷ்மிகாவுடன் முதல் முறையாக இணைந்து நடித்த , 'கீதா கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்த படத்தில் இணைந்து நடித்த இருவருடைய நடிப்புமே ரசிகர்களால் ரசிக்கப்பட்டதால் மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

டியர் காம்ரேட்:

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் , மீண்டும் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரக்கொண்டா இணைந்து நடித்த படம் 'டியர் காம்ரேட்'. இந்த படம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரீமேக்:

இந்நிலையில் இந்த படத்தை  பிரபல பாலிவுட்  இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோவ்கர் வாங்கியுள்ளார். இந்த படத்தில், நடிகர் விஜய் தேவரக்கொண்டாவையே நடிக்க வைக்க அணுகிய போது இந்த படத்தில் நடிக்க விஜய் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

40 கோடி சம்பளம்:

இந்த படத்திற்காக 40 கோடி சம்பளமாக கொடுப்பதாக கூறியும் முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். எனவே தற்போது இந்த படத்தில் இஷான் கட்டர் மற்றும் நடிகை ஜான்வி கபூர் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

விஜய் கூறி காரணம்:

இந்த படத்தில் நடிக்க மறுத்தது குறித்து விஜய் கூறுகையில், டியர் காம்ரேட் படத்திற்காக மிகவும்  கஷ்டப்பட்டு  நடித்தேன். முழு ஈடுபாடு செலுத்த வேண்டும் . மீண்டும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால், ஆறு மாதம் வரை செலவிட வேண்டும். அதனால் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என கூறியுள்ளார்.