நடிகர் விஜய் தேவாரக்கொண்டா, மற்றும் நடிகை ராஷ்மிகா நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம், 'டியர் காம்ரேட்' . தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளதால், ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம், விசாகபட்டினத்தில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து பேசினர் .

அப்போது விஜய் தேவாரக்கொண்டா, மேடையில் ரசிகர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீர் என மேடைக்கு ஏறி வந்த ரசிகர் ஒருவர், விஜய் காலில் விழா, பயந்து போய் விஜய் தேவாரக்கொண்டாவும் கீழே விழுந்தார். 

பின் அந்த ரசிகரை, பாதுகாவலர்கள் அழைத்து செல்ல, நீ பாசத்தை கட்ட வரியா, இல்ல அட்டாக் பண்ண வறியானே தெரியவில்லை என்றும், அவரை விட்டு விடுங்கள் என பாதுகாவலர்களிடம் கூறினார்.

ஆனால் இந்த சம்பவத்தின் பின்னும், படக்குழு சூழ்ச்சி உள்ளதாக கூறப்படுகிறது. பட குழுவை சேர்ந்த ஒருவர், கையை அசைந்து வேண்டும் என்றே, ரசிகர் ஒருவரை மேடைக்கு வர வழைத்து, ஏதேனும் சம்பவம் வைரலாக வேண்டும் என்பதற்காகவே விஜயை கீழேயே வைத்துள்ளார்கள் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ காட்சியும் தற்போது சமூக வலைதளந்தளில் வைரலாக பரவி வருகிறது.