ஒரு சில வருடங்களிலேயே... தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் படப்பிடிப்பில் இருந்து வெளியே வந்தபோது திடீரென கீழே வழுக்கி விழ, அவரை ரசிகர்கள் தாங்கி பிடித்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபல நடிகராக அறியப்பட்டவர். இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.  தமிழில் நடிகர் விக்ரமின் மகன் துருவ், நாயகனாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் வெளியான இப்படம் சுமாரான வெற்றியை மட்டுமே கண்டது.

இந்நிலையில் , தற்போது விஜய் தேவரகொண்டா  'பைட்டர்' படத்தில் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்த படத்தை, பூரி ஜெகநாதன் இயக்குகிறார். அனன்யா பாண்டே ஜோடியாக நடிக்கிறார்.

கரண் ஜோகர், பூரி ஜெகநாதர், சார்மி கவுர், ஆகியோர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியே வரும் போது, விஜய் தேவரகொண்டா பேலன்ஸ் மிஸ் ஆகி கீழே விழ போக அவரை ரசிகர்கள் தாங்கி பிடித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.