தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 63 வது படத்தின் படப்பிடிப்பில், கைலியை மடிச்சு கட்டிக்கிட்டு, லோக்கல் குத்து குத்திய வீடியோ  வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று அழைக்கப்படும் நடிகர்களில் ஒருவர், தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சர்கார்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வப்போது விஜய் ரசிகர்களை சந்திக்கும் காட்சிகள் வலைத்தளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷியாகி வருகிறது. 

அந்த வகையில் தற்போது படப்பிடிப்பு தலத்தில், விஜய் கைலியை கட்டிக்கொண்டு, ஒரு கட்டையின் மேல் எகிறி குதித்து, லோக்கல் டான்ஸ் ஆடும் சில காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, நடிகர் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் விரைவில் இந்த படத்தின் பெயரை படக்குழு அறிவிப்பார்கள் என விஜய் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.