ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை வெளியிட்டு தற்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்காக எகிற வைத்து வருகிறார்கள் படக்குழுவினர். லேட்டஸ்டாக ஜன நாயகன் பட எடிட்டர் விஜய் பற்றி சொன்ன தகவல் தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
சென்னை : விஜய் ரசிகர்கள் தன்னை மிரட்டுவதாக விஜய்யிடம் கூறிய ஜன நாயகன் பட எடிட்டரிடம் விஜய் சொன்ன செம பதில் தான் தற்போது ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாட்டப்பட்டு, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் மிக கவனமாக பார்த்து பார்த்து படத்தை எடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் எடிட்டராக பிரதீப் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விஜய்யை சந்தித்த போது தான் அளித்த புகாருக்கு விஜய் சொன்னதாக தெரிவித்த பதில் தான் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் சொன்ன கூல் பதில் :
பிரதீப் தன்னுடைய பேட்டியில், "ஜனநாயகன் பட ஷூட்டிங் பிரேக்கின் போது ஹச்.வினோத் என்னை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். நானும் அவரும் சுமார் 20 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் சும்மா விளையாட்டாக, உங்கள் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் என்னை மிரட்டுகிறார்கள். இத தளபதியோட கடைசி படம். அதனால் கண்டிப்பாக இந்த படத்தை தரமாக செய்ய வேண்டும் என்கிறார்கள் என்றேன். அதற்கு விஜய் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் ரொம்பவே அமைதியாக, கூலாகவும் ரிலாக்சாகவும் உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்றார்" என பிரதீப் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த கூலான பதில், விஜய் சொன்னதாக பிரதீப் சொன்ன வார்த்தைகள் ஆகியவை விஜய் ரசிகர்களால் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் நிதானமான, ஜாலியான இந்த நடவடிக்கை, ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி உடன் இருப்பவர்களை விஜய் ஊக்கப்படும் விதம், அவர்களிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறையை காட்டுகிறது. விஜய்யின் குணத்தை தான் அவரது ரசிகர்கள் புகழ்ந்த தள்ளி வருகிறார்கள்.
அரசியன் ஆக்ஷன் படம் :
ஜன நாயகன் படத்தின் கதை குறித்த விபரங்கள் தெரியவில்லை. இருந்தாலும் இது அரசியல் ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் ஈடுபாடு கொண்ட ஒரு கேரக்டரில் தான் விஜய் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. தலைமைத்துவம், சமூக சவால்கள், மக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான ஹீரோவை பற்றிய கதை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. பூஜே ஹெக்டே ஹீரோயினாக, பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜூ, பிரியா மணி, மோனிஷா பிலெஸி ஆகியோர் முக்கிய ரோல்களிலும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ படங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு ஐந்தாவது முறையாக இசையமைக்கிறார் அனிருத்.
பல மொழிகளில் ஜனநாயகன் :
மிக பிரம்மாண்டமாக ஜன நாயகன் படம் எடுக்கப்பட்டு வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக பெரிய பட்ஜெட் படமாக இதை எடுத்து வருகிறார்கள். இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல மொழிகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்களாம். அக்டோபர் மாதம் தீபாவளி ரிலீசாக ஜன நாயகன் படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு மாஸ் காட்டும் தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
