சமீப காலமாக முன்னணி நடிகர்கள் பலர், தங்களுக்கு வெற்றி படம் கொடுக்கும் இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தல, தளபதி, தலைவர் என சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில், தளபதி விஜய் தற்போது 'தெறி' , 'மெர்சல்' என இரண்டு வெற்றிப்படங்களை தனக்கு கொடுத்த, இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கை கோர்த்துள்ள திரைப்படம், 'பிகில்'. 

அட்லீ இயக்கத்தில், இதற்கு முன்பு வெளியான இரண்டு படங்களுக்குமே ஆரம்பதி ஒரு சில சர்ச்சைகளை சந்தித்து பின் வெளியானாலும், அட்லீ - விஜய் இருவருக்குமே மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனால் இவர்கள் மூன்றாவது முறையாக ஒன்று சேர்த்துள்ள 'பிகில்' படத்திற்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில், இதுவரை தமிழில் எடுக்கப்படாத கதைகளின் ஒன்றான, பெண்களின் கால் பந்து விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஏ.ஜி. எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டர், டீசர், மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்து... ட்ரைலர் முடியும் வரை... ஒவ்வொரு சீனும் சும்மா வெறித்தமாக உள்ளது... ட்ரைலர் இதோ...