Vijay beast: நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகும் பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 -ம் தேதி திரையில் ரீலிஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகும் பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 -ம் தேதி திரையில் ரீலிஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

ரிலீசுக்கு தயாரான பீஸ்ட்:

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டு படங்களை இயக்கி ஹிட் கொடுத்த வளர்ந்து வரும் இயக்குனர் நெல்சன். இவருடைய இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் பீஸ்ட்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், விஜய்யுடன் சேர்ந்து ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

படத்தின் பின்னணி பணிகள் தீவிரம்:

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

பீஸ்ட் படத்தின் ஹிட் பாடல்கள்: 

பீஸ்ட் படத்தில் வெளியான 2 பாடல்களும் அமோக வரவேற்பை பெற்றன. இந்த படத்திலுருந்து முதல் பாடலாக வெளியான அரபிக் குத்து 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படித்தது. அனிரூத் இசையமைத்திருந்த இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியிருந்தார். அனிரூத் இசையில் இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது.

இதையடுத்து கடந்த 19-ம் தேதி விஜய் ,நெல்சன், அனிரூத் மூவரும் இடம்பெற்றிருக்கும், ஜாலியோ ஜிம்கானா என்னும் பாடல் வெளியானது. இந்த பாடல் கார்த்தி வரிகளில் அனிரூத் இசையில், விஜய் குரலில் அமைத்திருந்தது. ஆனால் அரபிக் குத்து பாடல் போன்று ஹிட் அடிக்கவில்லை.

மேலும் படிக்க....Thalapathy 66: விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட ஹீரோயின்...! ஓகே சொன்ன நிறுவனம்..!

பீஸ்ட் டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி:

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், டீசருக்கு பதில் மாஸ் வீடியோவுடன் ட்ரைலர் தேதி மட்டும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.

 தீம் மியூசிக் இந்த படத்தின் காப்பியா..? 

இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட தீம் மியூசிக் ஒரு படத்தின் காப்பி என ஆதாரத்துடன் நெட்டிசன் ஒருவர் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த மியூசிக் அனிருத் இசையில் உருவாகியுள்ளதால், என்ன அனிருத் இது? இந்த வீடியோவும் காப்பிய என்று இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து, மீம் கிரியேட் செய்து வருகின்றனர். அனிருத்தை இப்படி நெட்டிசன்கள் குற்றம் சாட்டுவது இது முதல் முறையல்ல ரஜினியின் சும்மா கிழி, அஜித்தின் ஆலுமா டோலுமா உள்ளிட்ட ஏகப்பட்ட காப்பி சர்சையில் அனிருத் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…