Asianet News TamilAsianet News Tamil

'பிச்சைக்காரன் 2 ' படத்தில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி..!

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, விஜய் ஆண்டனி, இயக்கி, தயாரித்து, நடிக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 

vijay antony turn to director for pichaikaran 2 movie
Author
Chennai, First Published Jul 24, 2021, 1:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, விஜய் ஆண்டனி, இயக்கி, தயாரித்து, நடிக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனியை பொறுத்தவரை, உண்மையான உழைப்பு இருந்தால், திரையுலகில் பலரும் வியர்ந்து பார்க்கும் அளவிற்கு உயரலாம் என்பதற்கு மிக சிறந்த உதாரணம். ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு, இன்று நடிகர், தயாரிப்பாளர் என உச்சம் தொட்டு விட்ட இவர் அடுத்ததாக இயக்குனராகவும் அவதாரம் எடுக்க உள்ளார்.

vijay antony turn to director for pichaikaran 2 movie

இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்து கடந்த 2016 ஆண்டு வெளியான பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்ட 'பிச்சைக்காரன் 2 ' படத்தை தான், தற்போது இவர் இயக்கி, தயாரித்து, நடிக்க உள்ளார். கடந்த சில வருடங்களாகவே... வெற்றிப்படங்களுக்கு தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், 'பிச்சைக்காரன்' படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பது ஆச்சர்ய தகவல் இல்லை என்றே கூறலாம்.

இதுகுறித்த அதிகார பூர்வ தகவலை இன்று (ஜூலை 24, 2021) தனது பிறந்தநாளில் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். தனது   Vijay Antony Film Corporation நிறுவனம் மூலம்,  தயாரிக்கப்படும்  "பிச்சைக்கரன் 2"  திரைப்படத்தை இயக்குவது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இப்படத்தை இயக்குவது குறித்து பகிர்ந்து விஜய் ஆண்டனி தெரிவித்ததாவது...

vijay antony turn to director for pichaikaran 2 movie

ஒரு நீண்டகால கனவு இறுதியாக நனவாகிறது.  இந்த புதிய அவதாரம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.  நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும்  பணியாற்றியுள்ளேன். பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும்  துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது  நன்மை தரும் அம்சமாகும்.   

இசையமைப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு  வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம். எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான்  இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது பிறந்தநாளின் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில்,  "பிச்சைக்கரன் 2"  திரைப்படத்தில், இயக்குநராக எனது புதிய பயணம்   துவங்குவதை, உங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

vijay antony turn to director for pichaikaran 2 movie

மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு பிரமாண்டமான படைப்பாக  இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளுடன்  பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  ரசிகர்களுக்கு செண்டிமென்டும்,  பொழுதுபோக்கும்,  சரி விகிதத்தில் கலந்த சிறப்பானதொரு அனுபவத்தை "பிச்சைக்கரன் 2" திரைப்படம் தரும். இப்படத்தில்   நடிக்கவுள்ள  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios