விஜய் ஆண்டனி மகள் தற்கொலைக்கு மத்தியில், அவரின் தாயின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், நான் அவனி இல்லை, உத்தம புத்திரன், வெடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தன் மூலம் பிரபலமானார். மேலும் நான் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனி அடுத்தடுத்து சலிம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
இதனிடையே விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை மணந்தார். விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற 2 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மீரா மன அழுத்தத்தில் இருந்ததாவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்பட்டுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
படிப்பினால் மனஅழுத்தம்... பிள்ளைங்கள free-யா விட்ருங்க - தற்கொலை குறித்த விஜய் ஆண்டனியின் பேச்சு..!
இந்த நிலையில் மீரா குறித்து அவரின் தாய் பாத்திமா ட்விட்டரில் பதிவிட்ட பதிவு மீண்டும் வைரலாகி வருகிறது. தனது மகள் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாத்திமா வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரின் பதிவில் “என் வலிமைக்கு பின்னால் இருக்கும் சக்தி, என் கண்ணீருக்கு ஆறுதல், அதிகமான குறும்புகளால் என் மன அழுத்தத்திற்கு காரணமான என் தங்ககட்டி-செல்லக்குட்டி. மீரா விஜய் ஆண்டனி, வாழ்த்துகள் பேபி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மீராவின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மீராவின் மரணம் குறித்து இதுவரை விஜய் ஆண்டனி குடும்பத்தினர் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.