இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிடி ராஜா, சஞ்சய் குமார் தயாரிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான இதற்கு “ஹிட்லர்” என பெயரிடப்பட்டு உள்ளதோடு இப்படத்தின் முதல் பார்வையையும் படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. 

முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா தான் இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருக்கிறார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக ஹிட்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாம். அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம் ஆனால் இன்று வரலாற்றில் அந்தப் பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் என பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Hitler Official Motion Poster | Vijay Antony | Gautham Vasudev Menon | Dhana | Vivek Mervin

இதையும் படியுங்கள்... இனி என் மகளை விட்டு பிரிய மாட்டேன்! 'ரத்தம்' பட செய்தியாளர் சந்திப்புக்கு இரண்டாவது மகளுடன் வந்த விஜய் ஆண்டனி!