ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பாரம்பரியத்தின்  சுவடை பசுமரத்தாணி போல் பதித்து சென்றது ஜல்லிக்கட்டு போராட்டம்.

இப்படி புகழ் பெற்ற இந்த விளையாட்டின் தாக்கம் தற்போது முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படத்தில் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர் இயக்குனர்கள்.

இந்த வரிசையில், தற்போது விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தின் போஸ்டரிலும் இதனை தெரிவித்துள்ளார் இயக்குனர் அட்லீ.

இதே போல், நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள கருப்பன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராக நடித்துள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டின் அருமை பெருமைகளை மையப்படுத்தி நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டி தற்போது நடித்து முடித்துள்ள 'மதுர வீரன்' படம் முழுவதும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் நடிகர் ஆர்யா நடித்துள்ள சந்தன தேவன் படமும் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை கூறும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.