vijay and atlee clash

தெறி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்தி விஜய்-அட்லீ கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘விஜய்-61’ திரைப்படம் தொடங்கியதில் இருந்தே மோதல் போக்கு இருந்து வருகிறது.

முதலில் இசையமைப்பாளர்கள் குறித்த கருத்து வேறுபாடு, பிறகு நடிகை ஜோதிகா விலகல், அதன் பிறகு புகைப்படம் வெளியான விவகாரம், படபிடிப்புத் தளத்தில் விஜய் புகைப்படங்கள் திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் வெளியான சம்பவம் என அடுத்தடுத்த பிரச்சனைகளால் விஜய்-61 திரைப்படம் திண்டாடி வருகிறது.

இந்நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பே அட்லீ, நடிகர் விஜயிடம் கெட்டப் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், விஜய்யின் புகைப்படங்கள் வெளிவந்த பின்பும், தொடர்ந்து அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவது அட்லீக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.