vijay and AR Murugadoss to reunite with Sun Pictures after Atlee film
விஜய் 62 ஏ.ஆர் முருகதாஸ் இளையதளபதி விஜய் மீண்டும் இணையும் படம் இந்த படத்தை முதலில் லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்து ஆனால், இப்போது லைக்கா நிறுவனம் விலகியது காரணம் படத்தின் பட்ஜெட் அதிகம் என்று விலகியது மிகவும் வேதனையான விஷயம்.
குறிப்பாக விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்றாலே நூறுகோடி வசூல் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் இப்படி இருக்கும்போது இவர்கள் ஏன் விலகினார்கள் என்பது கேள்விகுறி இந்த கூட்டணி மீண்டும் இணைய முக்கிய காரணம் லைக்கா தான் என்பதும் நாம் அறியவேண்டிய விஷயம். விஜய் - முருகதாஸ் மதிப்பு தெரியாமல் விட்ட இந்த படத்தை
உடனே கோத்திக் கொண்டது சன் பிக்சர்ஸ்.

விஜய்யுடன் சன் பிக்சர்ஸ் ஏற்கனவே வேட்டைக்காரன், சுறா படங்களை தயாரித்தது. மூன்றாவது முறையாக கூட்டு சேரும் இந்த படம் தீபாவளி முடிந்ததும் படபிடிப்பு ஆரம்பம் என்று சொல்லபடுகிறது. அது மட்டும் இல்லாமல் விஜய் படங்களில் இதுவரை இல்லாத பிரமாண்டம் மற்றும் பொருள் செலவில் எடுக்கும் படம் துதான் என்பது குறிப்பிடத்தக்கது.
