*    இயக்குநர் சமுத்திரக்கனியின் லெவல் இப்போது வேற லெவல் ஆகியிருக்கிறது. ராஜமவுலி அவரை வேண்டி விரும்பி அழைத்து ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் வாய்ப்பு தந்திருக்கிறார். இந்த நிலையில், விஜய்க்காக செம்ம சோஷியல் சப்ஜெட்க் ஒன்றை ரெடி பண்ணி வைத்திருந்தார். அதன் ஒன்லைனை அவரிடம் சொல்வதற்கான முயற்சியில் இறங்கினார். இது விஜய்க்கு தெரிந்தும் ஒண்ணும் ரெஸ்பான்ஸ் இல்லையாம். 
இது தெரிந்து அப்செட்டான கனி, பேரரசு மாதிரியான இயக்குநர்களுக்கு கூட கதை சொல்ல வாய்ப்பு தர்றார். ஆனால் தரமான கதையை கண்டுக்க மாட்டேங்கிறாரே! என்று தன் ஜூனியர்களிடம் நொந்திருக்கிறார். 
(விடு பரமா!)

*     தனுஷுக்கு விருப்பமான இயக்குநர்களில் செல்வராகவன், வெற்றிமாறன் இவர்களை அடுத்து மித்ரன் ஜவஹரும் ஒருவர். இதுவரையில் மூன்று படங்கள் இவருடன் செய்துவிட்டவர், இப்போது நான்காவதாக இணைகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே தனுஷ்தான். 
(அப்புறம் எதுக்கு மித்ரன் ஜவஹர்?)

*    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அவருக்கு மீனா, குஷ்பு என இரு ஜோடிகள். இவர்களின் கேரக்டர்கள் படையப்பா பட ரகம். மீனாவோ செளந்தர்யா போல் சாத்வீகமாக வர, குஷ்புவோ ரம்யாகிருஷ்ணன் போல் மிரட்ட இருக்கிறாராம். ரஜினிக்கு வில்லியும் அவராம். 
(மன்னன்லேயும் கவுத்திட்டாங்க, மன்னவன்லேயுமா)

*    ஹெச். விநோத் இயக்கத்தில் அஜித் இணையும் இரண்டாவது படமான ‘வலிமை’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது. ஆனால் ஹீரோயின் உள்ளிட்ட பல விஷயங்களின் அறிவிப்பு தாமதாமாகி இப்போது படத்தின் செகண்ட் ஷெட்யூல் துவங்குவது இழுக்கிறது. இதனால் படத்தின் ரிலீஸும் தள்ளிப் போகலாம். தயாரிப்பாளர் போனிகபூர் மீது கடுப்பில் இருக்கிறார் அஜித். 
(நெவர் எவர் கிவ் அப் தல)