இந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் அவரது படங்கள் மக்களிடம் பாசிட்டிவ்வான கருத்துக்களை தொடர்ந்து வாங்கி கொண்டிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதே போல் ரசிகர்களும் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் என்ன என தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். 

அவரது வேகமான வளர்ச்சி இயக்குனர்கள் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

தற்போது இவர் ஓரம் போ இயக்குனர் புஷ்கர் காயத்ரியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு விக்ரம்-வேதா என பெயரை தேர்வு செய்துள்ளனர். 

டபுள் ஹீரோ சம்மந்தப்பட்ட கதையில் இன்னொருவர் வேறு யாருமல்ல. சில நாட்களுக்கு முன் பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்த மாதவன் தான்.

இதில் வில்லனாக கபாலி படத்தில் நடித்த ஜான் விஜய் கலீஜ் ரவுடியாக வித்தியாசமாக நடிக்கிறாராம்.நடிகைகள் விரைவில் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.