ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய, தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. எனவே, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு 'மாஸ்டர்' படம் வெளியாகும் என நம்பி காத்திருக்கின்றனர் தளபதியின் ரசிகர்கள். விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 65 ஆவது படத்தை நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது . இந்த படத்தை மிக பிரமாண்டமாக  சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், தகவல் வெளியான நிலையில்.. ஒரு சில காரணங்களால் திடீர் என இந்த படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார்.

விஜய்யின் 65 ஆவது படம் குறித்து, இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி வெற்றிமாறன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் விஜய்க்காக கதைகளை தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  வெற்றிமாறன் இயக்கத்தில் தான் விஜய் நடிக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக பரவலாக ஒரு தகவல் பரவியது.

ஆனால் இதுவரை விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் குறித்து உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், விஜய் தன்னுடைய 66 ஆவது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் விஜய்யிடம் தான் எழுதி வைத்துள்ள சூப்பர் ஹீரோ கதையை கூறியதாகவும், அவருக்கு படத்தின் கதை மிகவும் பிடித்து விட்டதாகவும், எனவே தளபதி தன்னுடைய 66 ஆவது படத்தை பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. விஜய் தன்னுடைய 66 ஆவது படத்தை பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.