சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்கள் படங்களை தயாரித்து வரும், சன் பிச்சர்ஸ் நிறுவனம், இன்று மாலை சரியான 5 மணிக்கு மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அது எதை பற்றியதாக இருக்கும் என ரசிகர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தனர்.

 

ஒருபுறம் ரஜினி ரசிகர்கள் 'அண்ணாத்த ' படத்தின் அப்டேட் பற்றி இருக்குமா அல்லது விஜய்யின் 65 ஆவது படம் குறித்த தகவலா?  என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், உண்மையிலேயே ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளது

அதாவது விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளதாகவும். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அறிவிக்கும் விதமாக சன் பிச்சர் நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் கலாநிதிமாறனுடன், விஜய் பேசி கொண்டு வருவது போலவும், இதை அடுத்து நெல்சன் திலிப் குமார் பேசுவது போலவும். பின்னர் தோட்ட தெறிக்க...  கார் பறக்கும்... அனிமேஷன் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜய் 65 ஆவது படம் குறித்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை மேலும் குஷியாகியுள்ளது.