தளபதி விஜய் தெறி, மெர்சல், ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 63 வது படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படம் கால் பந்து விளையாட்டை மையப்படுத்திய உருவாகிறது. விஜய் கால் பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க உள்ள, சில நடிகர்கள் பற்றி செய்திகள் வெளியான நிலையில், விரைவில் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் 63வது படப்பிடிப்பில் கலந்து கொள்ள காரில் வந்த வீடியோ மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்து, அவர்களை சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது விஜயின் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையின் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடப்பதாக கூறப்படுகிறது.

"