ஏ.ஆர்.முருகதாஸ்,இயக்கத்தில் விஜய் நடித்த 'சர்கார்' படம் பல விமர்சனங்களை தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில், இன்று முதல் விஜய் நடிக்கும் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

ஏற்கனவே அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைவதை உறுதி செய்தார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. எ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்று அதிகார பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று மிக பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த படம் விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியான பாரபட்சம், போன்றவற்றை  மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று பூஜையுடன் ஆரம்பமான, இந்த படத்தின் படப்பிடிப்பில், நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ, பாடலாசிரியர் விவேக், கலை இயக்குனர் முத்துராஜ், நடிகர் ஆனந்த ராஜ், உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 'பரியேறும் பெருமாள்' 'சிகை' ஆகிய படங்களில் நடித்த நாயகன் கதிர், காமெடி நடிகர் விவேக், யோகி பாபு, உள்ளிட்டோர் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.