தளபதி விஜய், இயக்குனர் அட்லி இயக்கத்தில், மூன்றாவது முறையாக  63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமான தயாரித்து வருகிறது.

 'தளபதி 63' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பின்னி மில் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக, படக்குழுவினர் பாண்டிச்சேரி அல்லது ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் விஜய், கால்பந்தாட்ட பயிற்சியாளர் ரோலில் நடிக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி,  விஜய்யின்  பெயர் 'மைக்கேல்' என்றும், வடசென்னை மீனவ குடும்பத்தின் பின்னணியில் இருந்து வருபவராகவும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பின் நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் ,  நடிகர் கதிர், விவேக் , யோகிபாபு  , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.