விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாகி வசூலை அள்ளிக்குவித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

அட்லி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  எகனாவே இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் என படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகிகள் பற்றும் மற்ற நடிகர்களையும் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நாடைபெற்று வருகிறது.  

அட்லி இயக்கிய 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய படங்களின் நாயகியான சமந்தா, மீண்டும் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. இன்னும் ஒருசில நாட்களில் நாயகி யார்? என்பது முடிவு செய்யப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.