vijay 62 movie name sarkar is copy for hindi movi

இளைய தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள 'விஜய் 62' ஆவது படத்தின் தலைப்பு 'சர்கார்' என இன்று மாலை சரியாக 6 மணிக்கு சன் தொலைக்காட்சி நிறுவனம், 'சர்கார்' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டது. 

குவிந்த பாராட்டு:

இந்த படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தொடர்ந்து, இளைய தளபதி விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

காப்பி அடித்த படக்குழு:

இந்நிலையில் தற்போது புதிதாக எழுந்துள்ளது ஒரு சர்ச்சை. விஜய்யின் 62 ஆவது படத்திற்கு வைத்துள்ள 'சர்கார்' என்கிற பெயர் ஏற்கனவே கடந்த 2005 ஆண்டு இந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து, சர்ச்சை இயக்குனர் என பெயர் எடுத்த ராம் கோபால் வர்மா இயக்கி, தயாரித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தின் பெயராகும். 

இதனால், இந்த படத்தின் டைட்டில்லை விஜய் படக்குழுவினர் காப்பி அடித்து விட்டதாக பலர், சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் படக்குழுவினர் ரசிகர்களை பல நாட்கள் காத்திருக்க வைத்து, பட தலைப்பை காப்பி அடித்து ஏமாற்றிவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு காப்பி அடிக்கப்பட்ட டைட்டில் என தெரிய வந்ததால், ரசிகர்கள் சிறு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனினும் 'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல் மனதை தேற்றிக்கொண்டு சில ரசிகர்கள் 'சர்கார்' பட ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து ஷேர் செய்து வருகிறார்கள்.