vijay 62 movie latest news

இளைய தளபதி விஜய் மெர்சல் படத்தின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து மூன்றவது முறையாக இயக்குனர் 'ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அறிந்தது தான். மேலும் இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் 'தளபதி 62' குறித்து முக்கிய அறிவிப்புகள் கடந்த சில தினங்களாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதன் படி ஏற்கனவே இந்த திரைப்படம் விவசாயிகளை பற்றிய திரைப்படம் என்றும் அதனால் படத்திற்கு 'ஏர்' அல்லது 'கலப்பை' என்று பெயர் வைக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது 'தளபதி 62' படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும். இவருக்கு ஜோடியாக ஏற்கனவே இவருடன் பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒரு நாயகியாகவும் மற்றும், பாலிவுட் நாயகி ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் விரைவில் இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.