vijay 61st movie updated

இளைய தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான, பைரவா படத்தில் மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகளை தட்டி கேற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.

இந்நிலையில் விஜய் தன்னுடைய 61 வது படத்தை, அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரைப்படம் தீ பொறி போல் ரசிகர்கள் மனதில் பற்றிக் கொண்டதால், தற்போது விஜயை வைத்து அவர் இயக்கும் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் மருத்துவ துறையில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேற்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மூன்று விஜய் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தில் அப்பா விஜய்க்கு பிறக்கும், 2 பிள்ளை விஜய்களில் ஒரு விஜய் மருத்துவராக நடிப்பதாகவும்.

அவருக்கு ஜோடியாக அதே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவராக வரும் காஜல் அகர்வாலுக்கும் விஜய்க்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் விரைவில் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த பரபரப்பு காட்சிகள் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.