இளையதளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் விஜய்யின் 61வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது மேலும் அட்லி இரண்டாவது முறையாக இளைய தளபதியை இயக்குகிறார்.

மேலும் ரசிகர்களை மேலும் உற்சாக படுத்தும் வகையில் இப்படம் குறித்து இதுகுறித்த 8 வினாடி வீடியோ ஒன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.