MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • நடிப்பு அரக்கியாக மாறும் கோமதி... ரூமை விட்டு வெளியேறும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

நடிப்பு அரக்கியாக மாறும் கோமதி... ரூமை விட்டு வெளியேறும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி மீது கடும் கோபத்தில் இருக்கும் பாண்டியன், அவர் செய்யும் டிராமாவையும் கண்டுபிடித்துவிடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 07 2026, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் கோமதி மறுபடியும் டிராமா போட ஆரம்பித்திருக்கிறார். தன்னால மூச்சே விடமுடியலனு சொல்லி நடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் பாண்டியன் அமைதியாக அமர்ந்திருக்கிறார். சத்தம் கேட்டு, பக்கத்து ரூமில் தூங்கிக் கொண்டிருந்த சரவணன் எழுந்து வந்து பார்க்கிறார். ஆனால் பாண்டியன் அமைதியாக கோமதியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அப்போது சரவணன், அப்பா பாருப்பா அம்மாவால முடியல ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகலாம்னு சொல்லுகிறார். அதற்கு பாண்டியன், டேய் உன் அம்மா பயங்கரமா நடிச்சிட்டு இருக்காடானு சொல்லுகிறார்.

25
ரூமை விட்டு வெளியேறும் பாண்டியன்
Image Credit : jiohotstar

ரூமை விட்டு வெளியேறும் பாண்டியன்

அவகூட சேர்ந்து என்னையும் நடிக்க சொல்லுறியா என கேட்கும் பாண்டியன், ரூமில் இருந்து பாயை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றுவிடுகிறார். அதன்பின்னர் கோமதி எழுந்து, என்ன நான் நடிக்குறேன்னு சொல்றீங்களா... எனக்கு உண்மையாவே மூச்சுவிட முடியலனு சொல்லி கோபமாக பேசுகிறார். சரி இப்போ என்கூட சண்டைபோடும் போது மட்டும் உனக்கு நல்லா மூச்சுவிட முடியுதே என பாண்டியன் கேட்டபின்னர் தான், அம்மா நடிக்கிறாங்க என்கிற உண்மை அரசிக்கும், சரவணனுக்கும் தெரியவருகிறது. அதன்பின்னர் பாண்டியன் ஹாலில் சென்று படுத்துக் கொள்கிறார்.

Related Articles

Related image1
செந்திலிடம் உண்மையை போட்டுடைத்த கோமதி... மன்னிப்பாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Related image2
குதூகலமாக இருந்த கதிர் - ராஜி... வயித்தெறிச்சலில் திட்டிய கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
35
ராஜி - கதிர் போடும் புது பிளான்
Image Credit : jiohotstar

ராஜி - கதிர் போடும் புது பிளான்

மறுபுறம் சென்னை சென்றிருக்கும் ராஜி, இரவு முழுக்க கதிர் உடன் ரொமான்ஸ் செய்துவிட்டு, டயர்டாகி நன்கு தூங்கிவிடுகிறார். அவர் எழுந்த உடனே கதிர் காஃபி ரெடியாக வைத்திருக்கிறார். ராஜியும் பிரஸ் அப் ஆகிவிட்டு வருகிறார். அதன்பின் கதிரிடம் பேசும் ராஜி, எனக்கு இங்கயே இருக்கலாம்னு தோணுது என சொல்கிறார். அதற்கு கதிர், நம்ம வந்ததே கோச்சிங்கிற்காக தான், நீ அதை மட்டும் பாரு என சொல்லிவிடுகிறார். பின்னர் ராஜியின் விருப்பத்திற்கு ஏற்ப பிளான் போடும் கதிர், வேண்டுமென்றால், இன்று இரவு இங்கேயே தங்கிட்டு நாளைக்கு கிளம்புவோம் என ஐடியா கொடுக்கிறார்.

45
ஐடியா கொடுக்கும் சரவணன்
Image Credit : jiohotstar

ஐடியா கொடுக்கும் சரவணன்

வீட்டில் கோமதி காலை எழுந்து சமையல் வேலைகளை முடித்திருக்கிறார். காலையில் பாண்டியன் சாப்பிட வருகிறார். அப்போது அங்கிருந்த அரசியை, மொட்டை மாடிக்கு போய் துணி எடுத்துட்டு வா என அனுப்பிவிடுகிறார் கோமதி. தன் கையாலேயே பாண்டியனுக்கு உணவு பரிமாற வேண்டும் என பிளான் போட்டு கோமதி இப்படி செய்ய, பாண்டியனோ நான் வெளியவே சாப்பிட்டுக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதையெல்லாம் பார்க்கும் சரவணன், நீ அப்பா பின்னாடியே போகாத, கொஞ்சநாள் அமைதியா இரு, அவரே உன்கிட்ட பேசுவாரு என சொல்கிறார். கோமதியும் அந்த பிளானுக்கு ஓகே சொல்கிறார்.

55
தவறை உணரும் செந்தில்
Image Credit : jiohotstar

தவறை உணரும் செந்தில்

மறுபுறம் செந்தில், மீனா பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துகொண்ட நிலையில், அவரிடம் சென்று நீ என்கிட்டயாச்சும் இந்த உண்மையை சொல்லிருக்கலாம்ல என கூறுகிறார் செந்தில். எனக்கு உன்மேல கோபமெல்லாம் இல்லை. வருத்தம் தான். நீ என்கிட்ட கூட சொல்லவே இல்லேல, நான் உன் புருஷன் தான என செந்தில் கேட்க. அதற்கு பதிலளிக்கும் மீனா, இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லியிருந்தால், என்ன நடந்திருக்கும், ஏற்கனவே மாமா என்னைய திட்டிகிட்டு இருக்காரு, இதில் நீங்களும் உடந்தையாக இருந்தீங்கனு தெரிஞ்சா உங்களை அடிச்சிருக்க மாட்டாரா என மீனா கேட்ட பின்னர் தான் செந்திலுக்கு புரிய வருகிறது. இதனுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தேவசகாயத்தோடு கூட்டு சேரும் ஆதி குணசேகரன்... பேராபத்தில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
Cooku with Comali: CWC 7 ஆரம்பம்! பிக்பாஸ் போட்டியாளர்கள் உள்ளே! இந்த முறை லிஸ்ட்ல யார் யார் இருக்காங்க தெரியுமா?
Recommended image3
அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 தமிழ் சீரியல்கள்... சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் லீடிங் யார்?
Related Stories
Recommended image1
செந்திலிடம் உண்மையை போட்டுடைத்த கோமதி... மன்னிப்பாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image2
குதூகலமாக இருந்த கதிர் - ராஜி... வயித்தெறிச்சலில் திட்டிய கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved