விஜயின் பைரவா படம் தற்போது திரையரங்கங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடி வருகிறது. இந்நிலையில் விஜய் அடுத்த படத்தில் நடிக்க தயாராகியுள்ளார் அதனால் தற்போது அட்லீயுடன் விஜய் 61 படத்திற்காக இணைந்துள்ளார்.
இரண்டாவது முறையாக சேரும் இவர்களது கூட்டணி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் 2016 ல் வெளிவந்த தெறி படம் பிளாக்பஸ்டர் அந்தஸ்த்தை பெற்றது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.
இதன் காரணமாக தற்போது அட்லீ தயாரிப்பாளர் தாணுவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் . மேலும் தாணு தெறி படத்தை விட விஜய் 61 படம் பெரிய சாதனை படைக்க விஜய் மற்றும் அட்லிக்கு எனது வாழ்த்துக்கள் என ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
விஜய் 61 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் சென்னை இசிஆரில் ல் உள்ள பின்னி மாலில் சிறப்பாக தொடங்கியுள்ளது . அதே இடத்தில் இன்னும் சில நாட்களில் அஜித்தின் 57வது படப்பிடிப்பும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .
