விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவை, அவதூறாக பேசிய மீராமீதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விஜய் மக்கள் மன்றம் சார்பாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: 2019 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருந்த டாப் 10 தமிழ் பிரபலங்கள்..! லிஸ்ட் இதோ...
 

சூப்பர் மாடல், மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார். இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கூட மீரா மிதுன் கொஞ்சம் கூட அடங்கவில்லை.

விஜய் - சூர்யா பற்றி பேசுவதால் அவர்களுடைய ரசிகர்கள் தனக்கு மிரட்டல் விடுவதாகவும் ஒரு பதிவு போட்டார். அதே போல் தன்னை அசிங்கமாக திட்டினாள் விஜய்யின் மனைவி சங்கீதாவையும், சூர்யா மனைவி ஜோதிகாவையும் நான் திட்டுவேன் என சவால் விடுவது போல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் செய்திகள்: கருணாஸ் பட நடிகை நவ்னீத் கவுர் எம்.பி... உட்பட குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
 

இவரை கண்டிக்கும் விதமாக பிக்பாஸ் தர்ஷனின் முன்னணி காதலி சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதை தொடர்ந்து விஜய்யின் நண்பர் சஞ்சீவ் மீரா மிதுனுக்கு ஒத்த வார்த்தையில் பளார் என பதிலளித்துள்ளார்.

மேலும் மீரா மிதுனின் இந்த அவதூறு பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், விஜய்யின் சகோதரர் விக்ராந்த் அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து, தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்: அஜித் மகள் அனோஷ்காவின் இந்த கியூட் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா! யாரும் அதிகம் பார்த்திடாத அரிய போட்டோஸ்!
 

இந்நிலையில் மீராமிதுன் மீது இப்படி பேசுவது கண்டிக்க தக்கது என்றும், அவர் மீது உரிய எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை பாயுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.