'அறம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிந்து தற்போது திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வீடியோ ஒன்றையும் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த வீடியோவை மேலும் பிரபலப்படுத்தும் விதத்தில் நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன். இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஷார் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோவிற்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்ப்பு கிடைத்துள்ளது.