காதலர் தினத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், ட்வீட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
காதலர் தினத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், ட்வீட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கோலிவுட் திரையுலகில், காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் ரசிகர் மத்தியில் இருக்கும் நிலையில், அடுத்தடுத்து தங்களுடைய படங்களின் பணிக்காகவும் இணைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா ஒன்று சேர்ந்துள்ள திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து முடிந்துள்ளதாகவும் விக்னேஷ் சிவன் ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உண்மை காதலி, நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதால் என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். தயாரிப்பாளர் லலித்குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
