நடிகை நயன் தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் அமெரிக்கா, அமிர்தசரஸ் என்று பறந்து பறந்து சென்று காதல் வளர்த்த காதையை (இதுவும் ஒரு புராணம் தானே பாஸு?) ஏஸியாநெட் தமிழ் அளவுக்கு ஃபாலோ பண்ணி போஸ்ட் போட்டு பொங்க வெச்ச ஆன்லைன் மீடியா வேறெதுவும் இருக்க முடியாது. 

இந்த விஷயத்தில் விக்கிக்கு (அட! விக்னேஷ் சிவனேதான்) ஏக சந்தோஷமே. நம் இணையதளத்தில் தங்களைப் பற்றி வரும் தகவல்களை உடனுக்குடன் நயனுக்கு ஷேர் செய்து புன்னைகைப் பூ பூக்க வைப்பது இவரது வழக்கம். எப்படி இவர்களின் காதல் பரவசங்களை பதிவு செய்கிறோமோ அதேபோல்தான் இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கின்ற உரசல், நெரிசல்களையும் நமது இணையதளம் அவ்வப்போது தட்டி எறிய தயங்கியதில்லை.

 

அந்த கட்டுரைகளை பார்த்தால் மட்டும் விக்கிக்கு ஏற்படும் விக்கலை எத்தனை குடம் தண்ணீர் குடித்தாலும் கட்டுப்படுத்த முடியாது. நயனே நேரில் வந்து சில ட்ரீட்மெண்டுகளை செய்தால் மட்டுமே சாத்தியம். இந்நிலையில், சமீபத்தில் நயன் - விக்னேஷ் உரவில் ஏற்பட்டிருக்கும் புது விரிசல் பற்றி எழுதி ‘உடைகிறதா இந்த கூட்டணி?’ என்று சீசனல் டைட்டில் ஒன்றையும் செருகியிருந்தோம். அதில் விக்னேஷின் அம்மா...உடனடியாக திருமணம் நடந்தாக வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதையும், நயனுக்கு அதில் இப்போதைக்கு இஷ்டமில்லை, ஏற்றுக் கொண்டிருக்கும் மெகா ப்ராஜெக்ட் கமிட்மெண்டுகளை முடிப்பதில் அவர் பிஸி! இந்த பஞ்சாயத்தால்  காதலர்களுக்குள் கசமுசா உரசல்! என்றும் எழுதியிருந்தோம். 

வழக்கம்போல் இதை உடனே வாசித்த விக்கிக்கு வழக்கம்போல் இந்தவாட்டி விக்கல் வரவில்லை. மாறாக தனது நயன் தாராவும், தனது அம்மாவும் சேர்ந்து இருக்கிற போட்டோவை  சட்டென்று அப்லோடிவிட்டார். அத்தோடு விட்டாரா? ‘லைஃப் இஸ் ஆல் எபவ்ட் பேலன்ஸ்’ என்று ஒரு தத்துவத்தையும் உதிர்த்து வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் பற்றி எரிய துவங்கியது அந்த  போஸ்ட். நயனின் காதில் அவரது நண்பர்கள் சிலர் இதை ஓத, விக்கிக்கு போன் போட்டு ‘என்ன திடீர்ன்னு எங்க போட்டோவை அப்லோடு பண்ணிட்ட?’ என்று கேட்க, இவரோ ‘ஏஸியாநெட் தமிழில் டாட்காம்ல...’ என்றிழுக்க, அவரோ ‘அப்படி என்னடா எழுதுனாங்க?’ என்று கேட்டதும், விக்கி அட்சரம் பிசகாமல் ஒப்புவித்திருக்கிறார். 

பதிலே பேசாமல் கேட்டு முடித்த நயன், எந்த ரியாக்‌ஷன் வார்த்தையையும் உதிர்க்காமல் லைனை கட் செய்திருக்கிறார். அவர் அப்படி டொக்கென லைனை கட் செய்தால், அடுத்து அவரே அழைக்கும் வரையில் போன் செய்யும் பழக்கம், தகிரியம் எதுவும் விக்கிக்கு இல்லையென்பதால் கம்முன்னு இருந்துவிட்டாராம். அதன் பிறகு நயன் எப்போ விக்கியை அழைத்தார், என்ன நடந்தது? இப்போ ஜோடி ஹேப்பியா இல்லே கடுகடுப்பா...ன்னு அப்டேஷன் இல்லை. அதைப்பற்றி நம்ம ஸ்பெஷல் சோர்ஸ் செப்புவதற்காக வெயிட்டிங். ஹும் ஏதோ நம்மால் முடிஞ்சது!