முனை தேய்ந்த கத்தியாக இருந்தாலும், பழம் அறுக்க துடியாய் துடிக்குமல்லவா? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டது இயக்குநர் விக்னேஷ் சிவனின் நிலை. நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் கல்யாணத்திற்கு எப்போது செல்லும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. 

நயன்தாராவின் அறிவிக்கப்படாத கணவராக இருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் இருவரும் கொஞ்சி மகிழும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கொதிப்படைய வைத்து வருகிறார் நயன்தாரா. அப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் நயந்தாரா...  விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களில் ஒரே ஒரு ஹிட் படம் என்றால் அது‘நானும் ரவுடிதான்’படம் மட்டுமே.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் நடித்த படம். அந்தப்படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இப்போது பகிர்ந்து இருக்கிறார் நயன்தாரா. அந்த வீடியோவில் பாண்டிச்சேரி கடற்கரையோரம் ஷூட்டிங் நடந்தபோது நயன்தாராவுக்கு அடுத்து வரும் சீனை பற்றி விளக்குகிறார் விக்னேஷ் சிவன். அதனை உள்வாங்கிக்கொண்டு சிரித்து ரசிக்கிறார் நயன். அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.