சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி என்கிற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படம் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் 2.0 படம் நிறைவு பெற்ற பிறகு மீண்டும் ரஞ்சித் மற்றும் ரஜினி கூட்டணி இணையவுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளிவந்ததை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் டபுள் சந்தோஷம் அடைந்தனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தை நடிகர் மற்றும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தன்னுடைய வொண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் வித்யாபாலனை சந்தித்த படக்குழுவினர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'கபாலி' படத்தில் ராதிகா ஆப்தே ஒப்பந்தம் ஆவதற்கு முன்னர் இயக்குனர் ரஞ்சித், வித்யாபாலனிடம் பேசியதாக கூறப்பட்டது.
இவர் சில்க் சுமிதாவின் வழக்கை வரலாற்று படத்தில் நடித்து, பாலிவுடின் சில்க் சுமிதாவாகவே மாரி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பிற்கு பாலிவுட் மற்றும் இன்றி தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் இந்த படத்தின் ஸ்கிர்ப்ட் பணியை முடித்துவிட்ட ரஞ்சித், தற்போது முழுவீச்சில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இருப்பதாகவும், மிகவிரைவில் இந்த படத்தின் அனைத்து தகவல்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
