தளபதி விஜயின் உதயா.. டி-சர்ட் போட்டு செம யூத்தாக காணப்படும் நடிகர் மாரிமுத்து - வைரலாக பகிரப்படும் வீடியோ!
அண்மையில் மறைந்த நடிகர் மாரிமுத்து, சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே, பல ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் அவர் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, அதன்பிறகு இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றவர் தான் நடிகர் மாரிமுத்து. அதே போல பரியேறும் பெருமாள் முதல் ஜெயிலர் படம் வரை ஏராளமான படங்களில் அவர் சிறந்த பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக கலக்கி வந்த மாரிமுத்து, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்து வந்தார். அந்த சீரியல் TRP ரேட்டிங்கில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு மாரிமுத்துவின் கதாபாத்திரம் தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.
ரௌடிகளிடம் சிக்கிய இனியா? ஏய் தொலைச்சிடுவேன்... கேரளாவில் மாஸ் காட்டிய பாக்கியா! லேட்டஸ்ட் அப்டேட்!
அதுமட்டுமின்றி ஆதி குணசேகரனாக இவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி மக்களை மனதை கவரத்துவங்கியது. அதிலும் குறிப்பாக இந்தாம்மா.. ஏய்.. என்கிற அவருடய டயலாக் பட்டிதொட்டியெங்கும் பேமஸ்.
அந்த அளவுக்கு மாரிமுத்துவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது எதிர்நீச்சல் சீரியல். அந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தான், அதன் டப்பிங்கிற்காக செப்டம்பர் 8ம் தேதி காலை டப்பிங் ஸ்டூடியோ சென்ற மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள சூர்யா என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவித்தனர்.
அவருடைய மறைவுக்கு பிறகு, மாரிமுத்துவின் பழைய வீடியோக்கள் பல இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான உதயா என்கிற படத்தில், மாரிமுத்து அவர்கள் நடித்துள்ள காட்சிகள், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரால் பகிரப்பட்டு வருகின்றது. டி-சர்ட் போடு மிகவும் யூத்தாக அதில் காணப்படுகிறார் மாரிமுத்து, இந்த படம் வெளியானபோது அவருக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது.