Thala Ajith in Chennai Airport : பிரபல நடிகர் தல அஜித் அவர்கள் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற தனது விடாமுயற்சி திரைப்பட பணிகளின் முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டு தற்பொழுது சென்னை திரும்பி உள்ளார்.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் அதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் மற்றும் விக்னேஷ் சிவன் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டது லைகா நிறுவனம். 

ஆனால் மகிழ் திருமேனியிடம் படம் சென்ற பிறகும், அஜித் அவர்களுடைய அந்த திரைப்படம் குறித்து பெரிய தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு அஜித்தின் இந்த புதிய திரைப்படத்திற்கு "விடாமுயற்சி" என்று பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. 

"எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு".. பகிரங்கமாக சொன்ன மன்சூர் அலிகான் - வெளியான அறிக்கை!

ஆனால் தலைப்பு வெளியிட்டதற்கு பிறகும் கூட அந்த படத்தில் பெரிய அளவில் முன்னேற்றங்கள் இல்லாமல் போனது. தல அஜித் அவர்கள் பல நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை திரிஷா, தல அஜித் மற்றும் விடாமுயற்சி பட குழுவினர் அசர்பைஜான் என்ற நாட்டிற்கு விடாமுயற்சி பட படப்பிடிப்புக்காக சென்றனர். 

சுமார் ஒரு மாத காலமாக விறுவிறுப்பாக படபிடிப்பு பணிகள் அங்கு நடந்து வருகிறது. இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் அங்கு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக துபாய் நாட்டில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக உள்ளது என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

Scroll to load tweet…

சந்தானத்தின் பில்டப் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? 80ஸ் பில்டப் படத்தின் விமர்சனம் இதோ

இதற்கிடையில் ஓய்வெடுப்பதற்காக தல அஜித் அவர்கள் தற்பொழுது சென்னை திரும்பி உள்ளார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர், மிடுக்கான கோட் சூட் அணிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போல வேகமாக அவர் நடந்து செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.