Singer Bhavatharini Death : இறந்த பாடகி பவதாரிணி அவர்களுடைய உடல் இன்று இரவு பண்ணைபுரம் கொண்டுசெல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி அவர்களுடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரை உலகத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது என்றால் அதை மிகையல்ல. பல்வேறு பிரபலங்களும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரபல இயக்குனர் விஜய் ஆண்டனி அவர்கள் இளையராஜா அவர்களுடைய வீட்டிற்கு நேரில் வந்து பவதாரினி உடலுக்கு தனது மரியாதையை செலுத்தி சென்றுள்ளார். 

அதேபோல பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அவர்களும், மூத்த நடிகர் சிவகுமார் அவர்களும் இளையராஜா அவர்களுடைய வீட்டிற்கு சென்று பாவதாரிணியின் உடலுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் "அன்பு மகளே" என்று பதிவிட்டு தனது மகள் பவதாரிணி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

Scroll to load tweet…

இன்று இரவு சுமார் 10 மணி அளவில் பவதாரிணி அவர்களுடைய உடல் பண்ணைபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னை கொண்டுவரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல் - பண்ணைபுரத்தில் இறுதி சடங்குகள் நடக்கும் என்று தகவல்!