60களின் முன்னணி நடிகை புஷ்பலதா (87) உடல்நலக்குறைவால் செவ்வாயன்று காலமானார். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். ஏவிஎம் ராஜனை மணந்த இவர், 99ல் "பூவாசம்" படத்தில் கடைசியாக நடித்தார். திரையுலகம் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறது.

1960 களில் தமிழ் சினாமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் புஷ்பலதா. 87 வயதான நடிகை புஷ்பலதா சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அவர் காலமானார்.

பழம்பெரும் நடிகை புஷ்பலதாவின் மறைவுக்குப் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பிரபலமாக இருந்தவர் புஷ்ப லதா.

தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற கதாநாயகியாக இருந்தார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஏ. வி. எம். ராஜன் நடிப்பில் 1963ஆம் ஆண்டு வெளியான 'நானும் ஒரு பெண்' என்ற படததஇல் நடித்தஆர். இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும்போது ராஜனுக்கும் புஷ்பலதாவுக்கு காதல் மலர்ந்தது. விரைவிலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 1970 களில் இருந்து படிப்படியாக படங்களில் நடிப்பதைக் குறைத்த புஷ்பலதா, பின்னர் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

கடைசியாக 1999ஆம் ஆண்டு ஸ்ரீபாரதி இயக்கிய முரளி, நளினி நடித்திருந்த "பூ வாசம்" என்ற படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகி இருந்தார். ஆன்மிக ஈடுபாட்டுடன் நற்பணிகள் செய்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு நடிகை புஷ்பலதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை சென்று சிகிச்சையும் பெற்றுள்ளார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய் மாலை உயிர் பிரிந்துவிட்டது. பழம்பெரும் நடிகையான புஷ்பலதாவின் மறைவு தமிழ் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு சினிமா ரசிகர்களும் திரைத்துறையினரும் இரங்கில் தெரிவிக்கின்றனர்.