திருமணமாகி 7 மாசம் தான் ஆகுது.. இளம் மனைவியை பிரிந்துவிட்டாரா பப்லூ? - லைக் மூலம் கண்டுகொண்ட நெட்டிசன்ஸ்!

Babloo Prithiveeraj : கடந்த 1971ம் ஆண்டு, அதாவது தனது 6வது வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின் முன்னணி நடிகராக வளர்ந்தவர் தான் பப்லூ பிருத்வீராஜ். இவர் பெங்களுருவில் பிறந்தவர்.

Veteran Kollywood Actor Babloo Prithiveeraj and Sheetal Got Separated? netizens guess through like ans

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான பப்லூ பிருத்வீராஜ், ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார். ஹீரோவாக இருந்த அவர், தற்போது குணச்சித்திர நடிகராக மாறியுள்ளார் என்றே கூறலாம். தற்போது தனது திரை வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியுள்ள அவர், பல நல்ல படங்களில் நடித்து வருகின்றார். 

57 வயதை கடந்துவிட்டபோதும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் ரசிகர்கள் கவர்ந்தவர் அவர். 90ஸ் கிட்ஸ்களுக்கு இவர் தொகுத்து வழங்கிய "சவால்" நிகழ்ச்சி என்றுமே மறக்காது. இது ஒருபுறம் இருக்க, இவ்வாண்டு துவக்கத்தில் நடிகர் பப்லூ, திடீரென தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார், காரணம் அவர் தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 23 வயதில் ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பப்லூவின் இரண்டாவது மனைவி ருக்மணி ஷீத்தல் மலேசியாவைச் சேர்ந்தவர். ஒரு நிகழ்ச்சிக்காக அவர் மலேசியா சென்றிருந்தபோது ஒருவரையொருவர் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடையே ஏற்பட்ட காதலுக்குப் பிறகு, இருவரும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பலர் தங்கள் திருமணத்தின் மீது அதிருப்தியையும் வெறுப்பையும் வெளிப்படுத்திய நேரத்தில், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.

Veteran Kollywood Actor Babloo Prithiveeraj and Sheetal Got Separated? netizens guess through like ans 

ஷீத்தல் தனக்கு நல்ல மனைவியாக இருக்கிறார் என்றும், தனது முதல் மனைவி தனக்கு ஏற்படுத்தி சென்ற காயங்களை இவர் ஆற்றுகிறார் என்றும் பல சமயங்களில் பப்லு கூறியது அனைவரும் அறிந்ததே. இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த நிலையில், அவ்வப்பொழுது ஒன்றாக எடுக்கும் பல வீடியோக்களை பகிர்ந்து இணையத்தில் பல வரவேற்புகளையும் பெற்று வந்தனர். 

லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171.. வில்லனை வலைவீசி தேடும் இயக்குனர் - அந்த 3 நடிகர்கள் லிஸ்டில் உள்ளார்களாம்!

இந்த சூழலில் தான் தற்பொழுது அந்த ஜோடி பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்கில் இருந்து தங்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றியுள்ளனர். அது போல ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நெட்டிசன் ஒருவர் நீங்கள் பிரிந்து விட்டீர்களா என்று கமெண்டில் கேட்க, அதற்கு ஷீத்தல் அந்த கம்மெண்ட்டை லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆகையால் அவர்கள் இருவரும் பிரிந்தது உண்மை தான் என்ற முடிவுக்கு தற்போது இணையவாசிகள் வந்துள்ளார்கள் என்றே கூறலாம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios